காது கூசுது..நடிகைகள் தொடர்பாக ஆபாசப்பேசு!! பாண்டியனுக்கு எதிராக திரும்பிய நாசர்..

Nassar Gossip Today
By Edward Aug 15, 2025 09:30 PM GMT
Report

யூடியூப்பில் பேட்டிக்கொடுத்து திரைப்பட மற்றும் சின்னத்திரையை சேர்ந்த நடிகர், நடிகைகள் தொடர்பாக தொடர்ந்து ஆவேசமாக பேசி வருவதாக தமிழா தமிழா பாண்டியன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் சங்க தலைவர் நாசர் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழா தமிழா பாண்டியன்

அந்த மனுவில், பாண்டியன் தொடர்ந்து அவதூறாகவும் ஆபாசமான வார்த்தைகளாலும் நடிகர் நடிகைகளை பேசி வருகிறார். குறிப்பாக பெண்களை இழிவுபடுத்தும் நோக்கில் வீடியோக்களை பகிர்ந்து, பொய்யான செய்திகளை உண்மையானது போல் எவ்வித ஆதாரமும் இல்லாமல் பதிவிட்டு வருகிறார்.

காது கூசுது..நடிகைகள் தொடர்பாக ஆபாசப்பேசு!! பாண்டியனுக்கு எதிராக திரும்பிய நாசர்.. | Complaint Filed Against Youtuber Pandian

பாலியல் குற்றச்சாட்டில் முன்னணி நடிகர்களின் அந்தரங்க லீலைகள், தாய் முன்பாகவே மகளிடம் பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட வீடியோக்களை தமிழா தமிழா யூடியூப் சேனலில் ஒளிப்பரப்பாகி வருகிறது.

கலையுலகம் என்பது ஒரு சாக்கடை, கோடம்பாக்கம் பல பாலியல் குற்றங்களை உண்டாக்கும் சங்கம் என்று பல்வேறு அவதூறுகளை பேசியும், டிஜே, சின்னத்திரை நடிகைகள், மேக்கப் ஆர்ட்டிஸ்ட்கள் என்று திரைத்துறையில் உள்ளவர்கள் தொடர்பாகவும் இழிவாக பேசி வருகிறார்.

திரைத்துறையில் இருக்கும் அனைவரும் பண்ணை வீட்டில் இருந்து சின்னத்திரைக்கு வருகிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற அவதூறான வீடியோக்களை வெளியிடுவது சட்டப்படி குற்றம், இதுப்போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். ஆபாசமாக பேசி வீடியோவை பகிரும் யூடியூப் சேனலையும் தடை செய்யவேண்டும் என்று அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளது.