நிரூபரை அடித்து கழுத்தை பிடித்து வெளியே தள்ளிய அஜித் மேலாளர்! நயன் கல்யாண சமயத்துல இதுவேறயா?
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகை நயன் தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் வரும் ஜூன் 8 ஆம் தேதி திருமணம் வரவேற்பு நிகழ்ச்சியும், 9 ஆம் தேதி திருமணமும் நடைபெறவுள்ளது.
மகாபலிபுரத்தில் நடைபெறும் இந்த திருமணத்திற்கு குறிப்பிட்ட சினிமா பிரபலங்களும் குடும்பத்தினரும் மட்டுமே பங்கேற்கவிருக்கிறார்கள். நோ மொபைல் போன், கேமரா என கண்டீசன் போடப்பட்டுள்ள நிலையில் சில தினங்களுக்கு முன் விக்னேஷ் சிவன் பத்திரிக்கையாளர்களை சந்தித்து திருமணம் பற்றி விவரத்தை அறிவித்தார்.
அப்போது தனியார் செய்தி தொலைக்காட்சியின் நிரூபரை நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திராவும் அவரது உதவி பணியாளர்களும் சேர்ந்து அடித்து கழுத்தை பிடித்து வெளியே தள்ளியிருக்கிறார்கள்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து அந்த நிரூபர் போலிசாரிடம் சென்று சுரேஷ் சந்திரா மற்றும் பணியாளர்கள் மீது புகாரளித்துள்ளார். நயன் தாரா விக்னேஷ் சிவன் கல்யாண சமயத்தில் இந்த செய்தி இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.