திரிஷாவும் வேண்டாம் கங்கனாவும் வேண்டாம்!! சூர்யா பட நடிகையை தட்டித்தூக்கிய தனுஷ்
முன்னணி கதாநாயகனாக திகழ்ந்து தமிழ் ரசிகர்களின் மிகப்பெரிய ஆதர்வை பெற்று வருபவர் நடிகர் தனுஷ். தற்போது கேப்டன் மில்லர் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். அவர் நடிப்பில் 50வது படத்தின் அப்டேட் சமீபத்தில் வெளியானது.
சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் தயாரிப்பில் தனுஷே அவரது 50வது படத்தினை இயக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாந்து. இந்நிலையில் இப்படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கவுள்ளார் என்றும் எஸ் ஜே சூர்யா முக்கிய ரோலில் நடிக்கவுள்ளார் என்றும் கூறப்பட்டது.
இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்கவுள்ளார் என்றும் நடிகை கங்கனா ரணாவத்திடன் கேட்டதற்கு நோ கூறியதாகவும் கூறப்பட்டது. ஆனால் தனுஷ் என்னுடைய Fab அவருக்கு எப்படி நோ சொல்லுவேன் என்று கங்கனா ரணாவத் கூறியிருந்தார்.
இந்நிலையில் தனுஷுக்கு ஜோடியாக அவரது 50வது படத்தில் திரிஷா, கங்கனா பெயர்களை தூக்கிவிட்டு இறுதி சுற்றில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து தேசிய விருது பெற்ற நடிகை அபர்ணா முரளியை கமிட் செய்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

