சிலரிடம் மட்டும் அக்கறை!! விஜய் சேதுபதி மீது புகார் வைத்த போட்டியாளரின் குடும்பத்தினர்

Kamal Haasan Vijay Sethupathi TV Program Bigg Boss Tamil 8
By Bhavya Dec 20, 2024 07:30 AM GMT
Report

பிக் பாஸ்

பிக் பாஸ் 8 நிகழ்ச்சி 70 நாட்களை கடந்து தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. கடந்த வாரம் டபுள் எலிமினேஷன் நடந்த நிலையியல் தற்போது 13 போட்டியாளர்கள் வீட்டிற்குள் உள்ளனர்.

சிலரிடம் மட்டும் அக்கறை!! விஜய் சேதுபதி மீது புகார் வைத்த போட்டியாளரின் குடும்பத்தினர் | Contestant Family On Vijay Sethupathi

இந்த நிகழ்ச்சியை கடந்த 7 வருடங்களாக தொகுத்து வழங்கிய கமல் திடீரென பிக் பாஸ் சீசனில் இருந்து வெளியேறிவிட்டார். இதனால் விஜய் சேதுபதி இந்த சீசனை தொகுத்து வழங்கி வருகிறார்.

ஆரம்பத்தில் இருந்தே விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் முறைக்கு கலவையான ரெஸ்பான்ஸ் தான் இருந்து வருகிறது. சிலர் விஜய் சேதுபதியை பாராட்டியும், விமர்சித்தும் சமூக வலைத்தளங்களில் கருத்துகள் கூறி வருகின்றனர்.

புகார்

தற்போது பிக் பாஸ் 8ல் போட்டியாளராக இருக்கும் ராணவ் குடும்பத்தினர் விஜய் சேதுபதி குறித்து ஒரு புகார் கூறி இருக்கின்றனர். அதாவது, "ராணவ் எப்போது பேசினாலும் அவரை 'போதும் உட்காரு' என விஜய் சேதுபதி சொல்லிவிடுகிறார்.

சிலரிடம் மட்டும் அக்கறை!! விஜய் சேதுபதி மீது புகார் வைத்த போட்டியாளரின் குடும்பத்தினர் | Contestant Family On Vijay Sethupathi

போட்டியாளர்கள் எல்லோரையும் சமமாக நடத்த வேண்டியது தொகுப்பாளரின் கடமை. ஆனால் விஜய் சேதுபதி சிலரிடம் மட்டும் அக்கறையாக நடந்து கொள்கிறார்" என ராணவ் அப்பா குற்றம் சாட்டி இருக்கிறார்.