பிக்பாஸ் 8 சீசன்களில் பரபரப்பை ஏற்படுத்திய போட்டியாளர்கள்..யார் யார் தெரியுமா?
பிக் பாஸ்
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் பிக்பாஸ். இந்திய தொலைக்காட்சிகளில் இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராத்தி உள்ளிட்ட மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிப்பரப்பு செய்யப்பட்டு வருகிறது.
தமிழில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ள பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி வரும் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதுவரை நடந்து முடிந்த பிக்பாஸ் 8 சீசன்களில், வீட்டுக்குள் சலசலப்பை ஏற்படுத்திய போட்டியாளர்கள் யாரெல்லாம் இருந்தார்கள் என்று பார்ப்போம்..
பரபரப்பை ஏற்படுத்திய போட்டியாளர்கள்
பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்ட வனிதா விஜயகுமார், பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போதே அவரைத்தேடி போலீஸ் வந்தது. கடத்தல் வழக்கில் விசாரணைக்காக வந்ததாகவும் கூறப்பட்டது. மேலும் சிலரிடம் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி சண்டைப் போட்டதும் பரபரப்பாக பேசப்பட்டது.
பிக்பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்ட நடிகர் தாடி பாலாஜி, தன் மனைவியுடன் மீண்டும் வாழ்கையை தொடர ஆசைப்பட்டும் சில விவாதங்களுடன் பிரச்சனை தொடர்ந்தது.
பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்ட நடிகை மதுமிதா தற்கொலைக்கு முன்று பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.
பிக்பாஸ் 3ல் கலந்து கொண்ட மீரா மிதுன், அனைவரையும் விமர்சித்து கடுப்பேற்றியும் ஆண் போட்டியாளர்கள் மீது சர்ச்சையான கருத்தையும் முன்வைத்தார்.
பிக்பாஸ் சீசன் 2ல் தாடி பாலாஜி மீது குப்பையை கொட்டி சலசலப்பை ஏற்படுத்தினார் ஐஸ்வர்யா தத்தா.
பிக்பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்ட ஜூலி, பொய் சொன்னது, மாற்றி பேசுவது என சக போட்டியாளர்களிடமும் பார்வையாளர்களிடமும் வெறுப்பை சம்பாதித்தார்.
பஸ்ஸில் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதை பெருமையாக கூறியதாக சரவணன் கூறியது பரபரப்பாக பேசப்பட்டது.
அதிகப்படியான கோபத்தை வெளிப்படுத்தி பார்வையாளர்களின் விமர்சனத்தை பெற்றார் அசீம், ஆனலௌம் டைட்டிலை கைப்பற்றி விமர்சனத்திற்குள்ளானார்.
சக பெண் போட்டியாளர்களிடம் மோசமான நடந்து கொண்டதாக புகாரளிக்கப்பட்ட நிலையில், பிக்பாஸில் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார் பிக்பாஸ் பிரதீப் ஆண்டனி.