41 பேர கொலை செய்தவனை நடுரோட்ல இழுத்துட்டு வரணும்!! நக்கீரன் கோபால் காட்டம்..
விஜய் கரூர் 41 மரணம்
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரை ஆற்றியபோது கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. விஜய்யை பலரும் விமர்சித்தும் கண்டித்தும், கைது செய்ய வேண்டும் என்றும் பலரும் தங்களின் கருத்துக்களை முன்வைத்து வருகிறார்கள்.
அதிலும் சிலர் விஜய்க்கு ஆறுதலாகும், அவர் வெளியிட்ட வீடியோவுக்கும் ஆதரவாகவும் கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள். தற்போது பிரபல மூத்த பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் விஜய்யை படுமோசமாக விமர்சித்து பேசியுள்ளார்.
நக்கீரன் கோபால்
அதில், மேல ஏறியதும் அவன் சொல்றான்(விஜய்) அவன் இவன்னு சொல்றேன்னு கோச்சிக்காதீங்க, என்னால ஜீரனிக்கவே முடியல. போலிஸ் இல்லன்னா, போலிஸ் பாதுகாப்போடுதான் உங்க முன்னாடி நிக்கிறேன்னு சொன்னான்.
எதுக்கு, யாருக்கு கிட்ட இருந்து பாதுகாப்பாக வந்தேன்னு சொல்றது, உங்க கூட்டத்தையே நீ வில்லனா சொல்ற. அதான் எருமை மாடு மாதிரி ஒரு டீம் வெச்சு இருக்கியே, அன்னைக்கே அந்த படவாவை உள்ளத்தூக்கி வெச்சிருந்தா இப்போ கொஞ்சமாது பயம் வந்திருக்கும்.
Y-யோ பாதுகாப்பு இருக்கும் போது, உன் ரசிகர்களிடம் இருந்து பாதுகாப்பாக கொண்டு வந்தாங்க என்று போலிசுக்கு நன்றி சொல்ற, வெட்கமா இல்லையா? என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
நடுரோட்ல இழுத்துட்டு
மேலும், 4 மணி வரைக்கு 4 ஆயிரம் பேர் வந்தவங்க, நாமக்கல்ல 10ஆயிரத்துக்கும் மேல இருக்கும் படை வந்துட்டாங்க. அவன் யாரையாவது மதித்து பேசியிருக்கானா? எஸ் ஏ சி ஒரு ஜீனியர் சார்.
அந்த பையன் யாரையாது மதிச்சிருக்கானா, இப்போ ஓடி ஒளித்தெரிதுல..CM மேல எனக்கு கோபம், 41 பேரை கொலை செய்தவனை நடுரோட்ல கைது செய்து இழுத்துட்டு வரல்லன்னு கோபம் எனக்கு.
ஒருத்தன் சட்டையில்லாம தூக்கிட்டு போறாங்க, அதை பார்க்காமல் எதுவும் சொல்லாமல், ஒரு கல் நெஞ்சனைவிட ஒரு கொடூரம் அவன், பிணங்களை பார்த்து பார்த்து பழகிப்போனவர்களை விட கொடூரமானவன். லைட்டை ஆஃப் பண்ணி ஆஃப் பண்ணி சிரிச்சிட்டு இருந்தான் பாருங்க..என்ன வெங்காயம்..இவனால் தமிழ் தேசத்திற்கு மிகப்பெரிய அழிவு இருக்கு, இவன் சாதாரணமானவன் இல்லை என்று கடுமையாக விமர்சனத்தை முன்வைத்துள்ளார் நக்கீரன் கோபால்.