ஹார்மோனுக்காக அம்மாவே அந்த ஊசியை போட்டார்களா!! திருமணத்திற்கு பின் உண்மையை கூறிய ஹன்சிகா..
நடிகர் தனுஷின் மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வந்தவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இந்தியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது நடிகையாக ஜொலித்து வருகிறார்.

இடையில் சிம்புவிடன் காதலித்து பின் பிரேக்கப். உடல் பருமனை ஏற்றியதால் வாய்ப்பினை இழந்து சில காலம் விலகி இருந்தார். அதன்பின் முற்றிலும் உடல் எடையை குறைத்து படுஒல்லியாக மாறியதோடு அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
சமீபத்தில் சோஹைல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஹன்சிகா, தங்களின் திருமண வீடியோவில் பல விசயங்களை ஓப்பனாக கூறியிருக்கிறார். அதில் தான் சிறுவயதில் நடித்து வந்த போது ஹார்மோன் ஊசியை என் அம்மா போட்டார்களா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

அதை நினைவுப்படுத்தி கூறிய ஹன்சிகா, இந்த செய்தி எனது 21வது வயதில் முட்டாள்தனத்தை போல் எழுதினார்கள். அப்படி நான் செலுத்தியிருந்தால் இப்போதும் என்னால் அதை எடுத்திருக்கமுடியும். இதுகுறித்து என் அம்மா வருத்தப்பட்டதாகவும் கூறியிருக்கிறார்.
மேலும், அதுமட்டும் உண்மையாக இருந்திருந்தால் டாடா, பிர்லாவை போல் நானும் கோடிஸ்வரியாக இருப்பேன். நான் பஞ்சாபி என்பதால் எங்கள் மகள்கள் 12 முதல் 16 வயதில் பெரியவள்களாக வளர்கிறார்கள் என்பது ஆச்சரியம் தான் எனக்கு என்று தெரிவித்துள்ளார்.