ராதா மேல் ஆசை!! எல்லைமீறி நடந்து கொண்ட சிம்பு பட நடிகர்..
விஜய் டிவியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்நிகழ்ச்சியில் 5வது சீசன் சில வாரங்களுக்கு முன் ஒளிப்பரப்பாகியது. நடுவராக மாதம்பட்டி ரங்கராஜன், செஃப் தாமி இருவரும் பங்கேற்று வருகிறார்கள்.
பல முன்னணி நட்சத்திரங்கள் போட்டியாளாராக கலந்து கொண்டு வரும் நிலையில் பிரபல காமெடி நடிகரும் தயாரிப்பாளருமான விடிவி கணேஷும் கலந்து கொண்டு வருகிறார்.
தற்போது இந்த வாரம் ஒளிப்பரப்பாகவுள்ள எபிசோட்டின் பிரமோ வீடியோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அதில் விடிவி கணேஷ், எங்க அம்மா கல்யாணம் பண்ணு பண்ணுன்னு தொல்லை பண்ணாங்க. எந்த மாதிரி பொண்ணு வேணும் என்று கேட்டார்கள்.
ராதா புகைப்படத்தை காமித்தேன். திருவனந்தபுரம் கழக்கூட்டத்தில் இருக்கும் ஒரு பொண்ணை பிடித்து கல்யாணம் பண்ணி வெச்சாங்க. எனக்கு ராதா மாதிரி கிடைக்காமல் அம்பிகா மாதிரி கிடைச்சிட்டாங்க என்று கூறியிருக்கிறார். இதனால் ஷாக்கான ராதா, விடிவி கணேஷ் மீது கோபத்தில் துறத்தி பின் சமாதனமாகி விடிவியிடம் கொஞ்சி இருக்கிறார் ராதா.