குக் வித் கோமாளி இரண்டாவது பைனலிஸ்ட் உறுதியானது.. தேர்வானது எதிர்பாராத ஒருவர்!
Cooku with Comali
TV Program
By Bhavya
குக் வித் கோமாளி
விஜய் டிவியில் ஹிட்டாக ஓடும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று குக் வித் கோமாளி. கடந்த 2019ம் ஆண்டு முதல் நடந்து வரும் இந்நிகழ்ச்சியின் 5சீசன்கள் முடிவடைந்துவிட்டது.
சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்ட இந்த 6வது சீசன் விரைவில் முடிவுக்கும் வரப்போகிறது. இதில் ராஜு, பிரியா ராமன், ஷபானா, நந்தகுமார் மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் டாப் 5 போட்டியாளர்களாக தேர்வாகி இருக்கிறார்கள்.
பைனலிஸ்ட் யார்?
முதல் பைனலிஸ்ட் ஆக ஷபானா தேர்வாகி இருந்தார். இந்நிலையில், தற்போது இரண்டாவது பைனலிஸ்ட் குறித்து ஒரு லேட்டஸ்ட் தகவல் கிடைத்துள்ளது.
அதாவது, லட்சுமி ராமகிருஷ்ணன் தான் இரண்டாவது பைனலிஸ்ட் ஆக தேர்வாகி இருக்கிறாராம். மொத்தம் 4 போட்டியாளர்கள் பைனலுக்கு செல்ல, வெளியேற போகும் ஒரு போட்டியாளர் யார் என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.