குக் வித் கோமாளி சீசன் 6ன் போட்டியாளர்களின் லிஸ்ட்!! யார் தெரியுமா?
குக் வித் கோமாளி சீசன் 6
விஜய் டிவியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. கடந்த ஆண்டு குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியை செஃப் தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கநாஜ் தலைமையில் நடைபெற்றது.
குக் வித் கோமாளி சீசன் 5 முடிந்து கிட்டத்தட்ட 6 மாதத்திற்கும் மேலாகியுள்ள நிலையில், புது அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் கோமாளிகளாகவும், குக்குகளாகவும் யார் யார் கலந்து கொள்ளவுள்ளார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
போட்டியாளர்களின் லிஸ்ட்
சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் தொடரில் நாயகியாக நடித்து தற்போது அய்யனார் துணை சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் மதுமிதா குக் வித் கோமாளியில் குக்காக பங்கேற்கவுள்ளார்.
அதேபோல் நடிகர் சஞ்சீவின் மனைவியும் நடிகையுமான ப்ரீத்தி சஞ்சீவ் குக் வித் கோமாளி சீசன் 6ல் போட்டியாளராக கலந்துக்கொள்ளவுள்ளார். லட்சுமி ராமகிருஷ்ணன், சபானா, பிரியா ராமன், உமை லடீஃப் போன்றவர்களும் கலந்து கொள்கிறார்கள்.
புகழ், குரேஷி, சுனிதா, சரத், ராமர், என பழைய கோமாளிகள் சிலர் இருந்தாலும், புதுவரவாக பிக் பாஸ் செளந்தர்யா, இன்ஸ்டா பிரபலம் சர்ஜின் குமார், பாடகர் பூவையார், மற்றும் டோலி உள்ளிட்டவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.