குக் வித் கோமாளி டைட்டில் உங்களுக்கு தான்.. தூக்கி கொடுத்த செஃப் வெங்கடேஷ் பட்

Star Vijay Cooku with Comali
1 மாதம் முன்
Kathick

Kathick

விஜய் தொலைக்காட்சியின் இரண்டு சீசன்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது மூன்றாவது சீசனாக குக் வித் கோமாளி நடைபெற்று வருகிறது. இதில், கிராஸ் கருணாஸ், ரோஷினி, அம்மு அபிராமி, சுட்டி அரவிந்த், ஸ்ருத்திகா என பல பிரபலங்கள் போட்டிபோட்டு சமைத்து வருகிறார்கள்.

மேலும், பாலா, ஷிவாங்கி, குரேஷி, மணிமேகலை மற்றும் பல புதிய கோமாளிகளும் நம்மை மகிழ வைத்து வருகிறார்கள். இந்நிலையில், இந்த வாரம் ஒளிபரப்பாகவுள்ள நிகழ்ச்சியில் அனைவருக்கும் ஷாக் கொடுக்கும் வகையில் விஷயம் ஒன்று நடந்துள்ளது.

ஆம், கிராஸ் கருணாஸ், அம்மு அபிராமி, தர்ஷன் இவர்கள் மூவரில் ஒருவருடைய டிஷ்ஷை சுவைத்த செஃப் வெங்கடேஷ் பட், 'நீங்க மட்டும் இந்த டிஷ்ஷை இறுதி போட்டிக்கு சமைத்திருந்தால், நீங்க தான் டைட்டில் வின்னர்' என்று கூறியுள்ளார், அந்த ப்ரோமோ வீடியோ கூட தற்போது வைரலாகி வருகிறது. இவர்களில் யாருக்கு அவர் அப்படி சொன்னார் என்பதை தெரிந்துகொள்ள நாளை வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.