குடிச்சிட்டு வண்டி ஓட்டாத!! சிவாங்கியை ரோட்டில் வைத்து அசிங்கபடுத்திய பிரபல நடிகர்..
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு அனைவரையும் தன் பக்கம் ஈர்த்தவர் சிவாங்கி. கடந்த குக் வித் கோமாளி 4 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு டாப் 6 இடத்தினை பிடித்தார்.
இந்நிலையில் நடிகர் சந்தானம், சுரபி நடிப்பில் வெளியாகவுள்ள டிடி ரிட்டர்ன்ஸ் படத்தில் சிறு ரோலில் நடிகர் கூல் சுரேஷ் நடித்துள்ளார்.
பல படங்களுக்கு எப்படி அவரது ஸ்டைலில் பிரமோஷன் செய்வது போல் டிடி ரிட்டர்ன்ஸ் படத்திற்கும் கூல் சுரேஷ் ரோட்டில் சென்று பிரமோட் செய்திருக்கிறார்.
டிடி என்றால் ட்ரங்க் அண்ட் ட்ரைவ் என்று சந்தானம் சொன்னதை அடுத்து குடிக்கூடாது என்ற விழிப்புணர்வுக்காக கூல் சுரேஷ் ரோட்டில் பிரமோஷன் செய்திருக்கிறார்.
அப்போது அந்த வழியாக சிவாங்கி காரில் சென்றிருக்கிறார். அவரை பார்த்ததும், சிவாங்கி ஏன் சீல் பெல்ட் போடல, பிரபலமானவர்களே இப்படி செய்தால் எப்படி என்று கூறியதோடு சிவாங்கி குடிச்சிட்டு கார் ஓட்டக்கூடாது என்று கூறி கலாய்த்திருக்கிறார்.
தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி கூல் சுரேஷை கடுமையாக சிவாங்கி ரசிகர்கள் திட்டி வருகிறார்கள்.