பொது இடத்தில் இப்படியா! ரஜினி பட நடிகைக்கு முத்தம் கொடுத்து ஷாக் கொடுத்த சிம்பு ரசிகர்..

Sakshi Agarwal
By Dhiviyarajan Feb 05, 2023 08:40 AM GMT
Report

தமிழ் திரைத்துறையில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் சாக்ஷி அகர்வால். இவர் காலா, விஸ்வாசம், அரண்மனை 3 போன்ற பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பிரபலமானார்.

ஷாக்காண ரசிகர்கள்  

நேற்று சாக்ஷி அகர்வாலின் 'நான் கடவுள் இல்லை' படம் ரிலீஸ் ஆனது. இப்படத்தின் ப்ரீமியர் ஷோவில் நடிகர் மட்டும் சிம்புவின் தீவிர ரசிகரான கூல் சுரேஷ் கலந்துள்ளார்.

அப்போது பத்திரிகையாளருக்கு பதில் அளித்து கொண்டிருந்த சாக்ஷியின் கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டார் கூல் சுரேஷ்.

இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சிலர் இதற்கு, பொது இடத்தில இப்படியா நடந்து கொள்வது என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்