KPY பாலா ராஜபரம்பரை அல்ல, பணம் எங்கிருந்து வருகிறது.. கூல் கூரேஷ் பரபரப்பு பேச்சு!
KPY பாலா
விஜய் டிவியின் மூலம் பிரபலமான பலரில் ஒருவர் பாலா. கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமான பாலாவிற்கு, குக் வித் கோமாளி நிகழ்ச்சி நல்ல வரவேற்பை எற்படுத்தி கொடுத்தது.
பாலா தனது உழைப்பில் வரும் பணம் அனைத்தையும் மக்களுக்காக செலவு செய்து வருகிறார். இப்போது இலவசமாக ஒரு மருத்துவமனை கட்டி வருகிறார்.
அவர் நல்ல எண்ணத்தில் இதையெல்லாம் செய்து வந்தாலும் அவர் மீது சில கடுமையான விமர்சனங்களும் வைக்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது, பேட்டி ஒன்றில் கூல் கூரேஷ் பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ராஜபரம்பரை அல்ல
அதில், " பார்க்கிறவர்களுக்கு எல்லாம் உதவி மற்றும் இலவச மருத்துவமனை கட்டும் அளவு பாலாவுக்கு வசதி இல்லை.
அவருக்கு அவ்வளவு பணம் எங்கிருந்து வருது? அவன் ஒன்னும் ராஜபரம்பரை, ஜமீந்தார் வீட்டு பையன் இல்லை, அவன் பின்னால் யாரோ இருக்காங்க, அதை பற்றி விசாரணை செய்ய வேண்டும்" என பேசியுள்ளார்.