காதலித்த அதிதி சங்கர் இனி என் தங்கச்சி மாதிரி.. மன்னிப்பு கேட்டு புலம்பிய நடிகர்..

Shankar Aditi Shankar
By Jai Aug 17, 2022 02:43 AM GMT
Report

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, சங்கர் மகள் அதிதி சங்கர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து இன்று வெளியான படம் விருமன் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இப்படத்தில் முதன்முதலில் நடிகையாக அறிமுகமாகிய நடிகை அதிதி சங்கர் இப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளார்.

சமீபகாலமாக காமெடி நடிகராக நடித்து வரும் கூல் சுரேஷ், அனைத்து படங்களுக்கு சென்று பார்த்திவிட்டு விமர்சனத்தை கூறுவார். அந்தவகையில் விருமன் படத்தினை பார்த்து விட்டு அதிதி சங்கர் என் காதலி. நான் அவரை காதலிக்கிறேன் என்று கூறி சர்ச்சையில் மாட்டினார்.

அதன்பின் சங்கர் என்ன செய்தாரோ தெரியவில்லை நேற்று வெளியான ஒரு படத்திற்கு விமர்சனம் கொடுக்க வந்த கூல் சுரேஷ் மன்னித்துவிடுங்கள் சங்கர் சார் என்று கெஞ்சியுள்ளார்.

விருமன் படத்தில் வரும் தேன்மொழி கதாபாத்திரத்தை போன்று இருக்கும் பெண்ணை நான் காதலித்தேன். அதை பார்த்த விரக்தியில் இப்படி நடந்து கொண்டதாகவும் அதிதி சங்கர் இனிமேல் என் தங்கச்சி என்றும் கூறியுள்ளார்.