நெகட்டிவ் விமர்சனங்கள்.. ஆனாலும் முதல் நாள் வசூலில் சாதனை படைத்த கூலி

Rajinikanth Box office Coolie
By Kathick Aug 15, 2025 03:30 AM GMT
Report

நேற்று வெளிவந்த கூலி திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் கிடைத்திருந்தாலும் கூட முதல் நாள் வசூல் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான கூலி திரைப்படம் நேற்று உலகெங்கும் வெளிவந்தது. திரையரங்கம் திருவிழா கோலமாக மாறியது.

நெகட்டிவ் விமர்சனங்கள்.. ஆனாலும் முதல் நாள் வசூலில் சாதனை படைத்த கூலி | Coolie First Day Box Office

ரசிகர்கள் கொண்டாட்டம் ஒரு பக்கம் இருந்தாலும், படத்தின் மீது நெகட்டிவ் விமர்சனங்கள் வைக்கப்பட்டது. அப்படி இருந்தும் கூட முதல் நாள் உலகளவில் ரூ. 155 கோடி முதல் ரூ. 160 கோடி வரை வசூல் செய்து மாபெரும் சாதனையை கூலி படைத்துள்ளது.

இதற்குமுன் விஜய்யின் லியோ படம் முதல் நாள் உலகளவில் ரூ. 148 கோடி வசூல் செய்து அதிக வசூல் செய்திருந்தது படம் என்கிற சாதனையை வைத்திருந்தது. ஆனால், தற்போது அந்த சாதனையை ரஜினியை கூலி திரைப்படம் முறியடித்துள்ளது.