ரிலீஸுக்கு முன்பே லாபத்தை அள்ளிக்கொடுத்த கூலி.. பிசினஸ் ரிப்போர்ட்

Rajinikanth Box office Coolie
By Kathick Aug 13, 2025 03:52 AM GMT
Report

ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படம் நாளை வெளிவரவிருக்கும் நிலையில், இதுவரை நடைபெற்று முன்பதிவில் மட்டுமே ரூ. 85 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

இதன்மூலம், கண்டிப்பாக இப்படம் உலகளவில் மாபெரும் வசூல் சாதனை படைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இந்நிலையில், கூலி திரைப்படம் பிசினஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ரிலீஸுக்கு முன்பே லாபத்தை அள்ளிக்கொடுத்த கூலி.. பிசினஸ் ரிப்போர்ட் | Coolie Movie Business Report

இப்படத்தின் மொத்த பட்ஜெட் ரூ. 355 கோடி. இதில் நடிகர்கள், நடிகைகளின் சம்பளம் மட்டுமே ரூ. 275 கோடி. ரூ. 355 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை, ரூ. 530 கோடிக்கு சன் பிக்சர்ஸ் பிசினஸ் செய்துள்ளனர்.

திரையரங்க உரிமைகள், சாட்டிலைட் உரிமை, ஓடிடி உரிமை என அனைத்தும் சேர்த்து ரூ. 530 கோடிக்கு கூலி படம் பிசினஸ் செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ. 355 கோடி பட்ஜெட் செலவு போக, ரூ. 175 கோடி சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு லாபம் கிடைத்துள்ளது.