கூலி படம் எப்படி இருக்கு!! வெளிநாட்டு ரசிகர்களின் விமர்சனம்..
கூலி படம்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நாகர்ஜுனா, செளபின் ஷாஹிர், சத்யராஜ், உபேந்திரா, அமீர் கான், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து உருவாகியுள்ள படம் கூலி.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் இன்று ஆகஸ்ட் 14 ஆம் தேதி உலகம் முழுதும் இருக்கும் திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது. தமிழ்நாட்டில் காலை 9 மணி முதல் கூலி படத்தின் முதல் காட்சிகள் தொடங்குகின்றது.
கேரளாவில் காலை 6 மணிக்கே படக்காட்சிகள் தொடங்கிவிட்டது. பிற மாநிலங்களில் உள்ளூர் விநியோக அட்டவணைகளுக்கு ஏற்பட்ட படம் ரிலீஸாகும்.
விமர்சனம்
இந்நிலையில் வட அமெரிக்கா போன்ற பல பகுதிகளில், இந்திய நேரப்படி அதிகாலை 4 மணிக்கு முதல் ஷோ போடப்பட்டுள்ளது. தற்போது முதல் காட்சியை பார்த்த வெளிநாட்டு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கூலி படம் எப்படி இருக்கிறது என்ற கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
அதில் சினிமா விமர்சகர், கிறிஸ்டோபர் கனகராஜ் அமெரிக்காவில் அதிகாலையிலேயே படத்தினை பார்த்து தன்னுடைய கருத்தினை பகிர்ந்துள்ளார்.
முதல் பாதி ஓகே என்றும் ரஜினிகாந்தின் நடிப்பு, நாகர்ஜுனாவின் ஸ்டைல், ஸ்ருதியின் பர்ஃபார்மன்ஸ், அனிருத்தின் 4 பாடல்கள் மஜா என்றும் ஆனால் கதைத்தான் ஆங்காங்கே கனெக்ட் ஆகவில்லை என பார்த்த முதல் பாதி விமர்சனத்தை பதிவிட்டுள்ளார். தற்போது இரண்டாம் பாதி முடிந்த நிலையில், கூலி - போலி என கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும், முதல் பாதி டீசன்ட்டாக உள்ளதாக இங்கிலாந்தில் இருந்து இந்திய படங்களை பார்த்து விமர்சித்து வரும் ஏபி ஜார்ஜ் விமர்சனம் செய்துள்ளார்.
அண்ணாத்த நம்ம கிட்ட மாட்டல, நாம தான் திருப்பி அண்ணாத்த கிட்ட மாட்டிருக்கோம் 😅#CoolieFDFS #CoolieDisaster #CoolieReview pic.twitter.com/lqM1k2UofN
— ᗰIᑕᕼᗩEᒪ 🥊 (@Michealtweets) August 14, 2025



