ஐபோன் கொடுத்த தயாரிப்பாளர்.. குச்சி மிட்டாய் கொடுத்து கலாய்த்த கூல் சுரேஷ்..

Silambarasan Vendhu Thanindhathu Kaadu Gautham Vasudev Menon
By Edward Sep 27, 2022 01:15 PM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் ஒரு படம் வெளியாகினால், அதற்கு பிரமோஷன் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அதன் அடிப்படையில் படத்தின் பிரமோஷனுக்காக பல விளம்பரங்களும் நிகழ்ச்சிகளும் நடித்துவது வழக்கம்.

அப்படி நடிகர் சிம்பு, இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் வெளியான படம் வெந்து தணிந்தது காடு. அப்படம் ஆரம்பித்த நாள் முதல் படத்தின் பிரமோஷன் வேலைகளை செய்து வருகிறார் கூல் சுரேஷ்.

காமெடி நடிகராக இருக்கும் இவர் வெந்து தணிந்தது காடு சிம்புவுக்கு வணக்கத்த போடு என்ற டயலாக்கை கொண்டு அனைவரையும் தன் பக்கம் ஈர்த்து வந்தார். இதன்பின் வெந்து தணிந்தது காடு படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.

ஐபோன் கொடுத்த தயாரிப்பாளர்.. குச்சி மிட்டாய் கொடுத்து கலாய்த்த கூல் சுரேஷ்.. | Coolsuresh Gift After Ishari Ganesh Present Iphone

இதற்கு நடிகர் சிம்பு கூட கூல் சுரேஷுக்கு நன்றி தெரிவித்திருந்தார். இந்நிலையில், கெளதம் மேனனுக்கு பைக்கும், சிம்புவுக்கு காரும் வழங்கி கவுரவித்தார் அப்படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.

அதேபோல் கூல் சுரேஷுக்கு ஐபோன் ஒன்றினை பரிசாக வழங்கியிருக்கிறார் தயாரிப்பாளர்.

அவருக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம் கூல் சுரேஷ் ஐசரி கணேஷுக்கு குச்சி மிட்டாயில் வெந்து தணிந்தது காடு ஐசரி கணேஷுக்கு வணக்கத்தை போடு என்ற வாசகத்துடன் அன்பளிப்பு ஒன்றினை வழங்கி இருக்கிறார்.

இந்த விசயம் தற்போது நெட்டிசன்களால் கலாய்க்கப்பட்டு வருகிறது.

ஐபோன் கொடுத்த தயாரிப்பாளர்.. குச்சி மிட்டாய் கொடுத்து கலாய்த்த கூல் சுரேஷ்.. | Coolsuresh Gift After Ishari Ganesh Present Iphone

Gallery