அந்த தொழிலை சட்டபூர்வமாக்கி வரியும் வசூலிக்கும் வினோதமான நாடுகள்!! எந்தெந்த நாடுகள் தெரியுமா?

United States of America Germany World Prostitute
By Edward Dec 12, 2025 02:30 PM GMT
Report

பாலியல் தொழில்

உலகம் தோன்றிய காலம் முதலே விபச்சாரம் இருந்து கொண்டே தான் வருகிறது. இந்தியாவில் சில இடங்களில் விபச்சாரம் சட்டவிரோதமாக கருதப்பட்டாலும், ஒட்டுமொத்த இந்தியாவை பொறுத்தவரை அது தடைசெய்யப்பட்டதாகவும் சட்டவிரோதமானதாகவும் இருக்கிறது.

ஆனால் உலகில் பல நாடுகள் விபச்சாரத்தை சட்டபூர்வமான தொழிலாக அங்கீகரித்தும் அதற்கு வரியும் விதித்து வசூலித்து வருகிறது.

அந்த தொழிலை சட்டபூர்வமாக்கி வரியும் வசூலிக்கும் வினோதமான நாடுகள்!! எந்தெந்த நாடுகள் தெரியுமா? | Countries Where Prostitution Is Legal

அப்படி உலகிலுள்ள மொத்தம் 195 நாடுகளில் 77 நாடுகள் விபச்சாரத்தை முழுமையாக சட்டபூர்வமாக்கியுள்ளது. அதில் 11 நாடுகள் விபச்சாரத்தை கடுமையான சட்டங்களுடன் அதை அனுமதிக்கிறது.

அமெரிக்கா போன்ற சில நாடுகளில் சில விதிவிலக்குகளுடன் அதை அங்கீகரித்திருக்கிறது. அப்படி எந்தெந்த நாடுகள் விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்கி வரி விதிக்கிறது என்பதை பார்ப்போம்.

எந்தெந்த நாடுகள்

டென்மார்க்கில் 1999ல் பாலியல் தொழில் சட்டவிரோதமற்றது என்று அறிவித்தாலும் பாலியல் உறவுக்கு கட்டாயப்படுத்துதல், கடத்தல், சிறார்களை வற்புறுத்துதல் போன்ற 3ஆம் தரப்பு நடவடிக்கைகள் சட்டவிரோதமானதாக இருக்கிறது.

பின்லாந்து நாட்டில் பாலியல் தொழில் சட்டப்பூர்வமானதாகவும் பொது இடங்களில் பாலியல் தொழிலை நடத்துவது சட்டவிரோதமானதாகவும் அறிவித்திருக்கிறது. 1990ல் பொருளாதார மந்தநிலையின்போது பாலியல் தொழில் அதிகளவில் தொடங்கியது, தற்போது பின்லாந்தில் மற்ற தொழில்களை போலவே சிவப்பு விளக்கு மாவட்டங்கள் அனைத்தும் இணையம் மற்றும் தனிப்பட்ட விளம்பரங்கள் மூலம் அணுகக்கூடியதாக இருக்கிறது.

அந்த தொழிலை சட்டபூர்வமாக்கி வரியும் வசூலிக்கும் வினோதமான நாடுகள்!! எந்தெந்த நாடுகள் தெரியுமா? | Countries Where Prostitution Is Legal

கோஸ்டா ரிகாவில் பாலியல் தொழில் முற்றிலும் சட்டப்பூர்வமானதாகவும் உறவுக்கு கட்டாயப்படுத்துதல், கடத்தல், சிறார்களை வற்புறுத்துதல் போன்றவைகளுக்கு தடை விதித்தது.

அர்ஜென்டினாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தால் பாலியல் தொழில் சட்டப்பூர்வமானதாகவும் விபச்சாரத்திற்கு ஊக்குவிப்பது, சுரண்டுவட்து அங்கு பிரச்சனையாகவும் இருக்கிறது. குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளை நாட்டிற்குள் விபச்சாரத்திற்காக கடத்துவது ஒரு பிரச்சனையாகவும் இருக்கிறது.

கனடாவில் பாலியல் தொழிலுக்கு எதிராக எந்த சட்டமும் இல்லை என்றாலும் பாலியல் விடுதியை வைத்திருப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. பாலியல் தொழில் குறித்து சந்தைப்படுத்துவது, பொதுவெளியில் தொடர்புகொள்வதும் சட்டவிரோதமானதாகும்.

ஜெர்மனியில் 4 லட்சம் பேர் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் வருவாய் மிகப்பெரிய நிறுவனங்களைவிட அதிகமாகும். பாலியல் தொழில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 6 பில்லியன் யூரோக்களை ஈட்டுகிறது ஜெர்மனி. 1.2 மில்லியன் வாடிக்கையாளர்கை கொண்டுள்ள ஜெர்மனி அரசாங்கம் இந்த வருவாயில் ஒரு பகுதியை சமூக நலன்களுக்கு பங்களிக்க பயன்படுத்துகிறது.

பெல்ஜியம், பிரான்ஸ், கிரீஸ், சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, மெக்சிகோ போன்ற நாடுகளும் பாலியல் தொழிலை அதிகாரப்பூர்வமாக்கியுள்ளனர்.