காதலுக்கு சைஸ் பிரச்சனை இல்லை.. மகாலட்சுமி - ரவீந்தருக்கு முன்பே நிரூபித்த தம்பதிகள்..
ரவீந்தர் - மகாலட்சுமி
சின்னத்திரை சீரியல் நடிகையாக இருந்து தயாரிப்பாளர் ரவீந்தரை இரு ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டவர் நடிகை மகாலட்சுமி. கடந்த மாதம் இருவரும் அதிர்ச்சியூட்டும் வகையில் திருமணம் செய்து கொண்டனர்.ஃபேட்மேன் என்று கூறப்படும் ரவீந்தர் சில்லியாக அழகாக இருக்கும் மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டது பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் விமர்சனத்தை தூக்கி போட்டு திருமணத்திற்கான விளக்கத்தை அளித்து வந்தனர். திருமணம் முடிந்து மகாபலிபுரம் ஹனிமூன் சென்றும் குலதெய்வ கோவிலுக்கு விமானத்தில் பறந்து வழிப்பட்டும் வந்தனர்.

உடல் முக்கியமில்லை காதலுக்கு
ஆனால் இவர்களுக்கு முன்பே பல உடல் சைஸ் முக்கியமில்லை என்று காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஃபேட்மேன் ஜார்ஜ் கீவுட் என்ற 28 வயது இளைஞர், Sienna Keera என்ற இளம் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இத்திருமணத்தால் தங்களை பலர் விமர்சித்து பேசி வந்ததாகவும் அதையெல்லாம் துளிக்கூட கண்டுகொள்ளாமல் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோக்களையும் ரொமாண்டிக் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு தற்போது இரு ஆண் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது.
? | Couple insist 'size doesn't matter' after strangers say relationship is a sham
— Tyla (@Tyla) September 22, 2022
More below: pic.twitter.com/CVjIYFLCoo
