விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து மனு..இணையத்தில் கசிந்தது எப்படி!! நீதிபதி கொடுத்த விளக்கம்....
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்தது முதல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அவருக்கு ஏதாவது ஒரு இடத்தில் இருந்து பிரச்சனைகள் வந்துக் கொண்டே இருக்கிறது.

சங்கீதா விவாகரத்து மனு
கரூர் நெரிசல் விவகாரம், ஜனநாயகன் ரிலீஸ் விவகாரம், சங்கீதா விவாகரத்து விவகாரம், திரிஷா திருமண நிகழ்ச்சி விவகாரம் வரை தற்போது வரை சிக்கல்களை சந்தித்து வருகிறார் விஜய்.
இதற்கிடையில், தன் கணவர் விஜய், நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகவும் எவ்வளவோ கண்டித்தும் தனியாக நடிகையுடன் வெளியில் செல்வது புகைப்படம் போடுவதுமாக இருந்து வருகிறார் என்றும் புகாரளித்து விவாகரத்து மனுதாக்கல் செய்தார் சங்கீதா.

இவ்வழக்கு இன்னும் விசாரணைக்கு வராத நிலையில், அது தேர்தல் நேரத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
இதற்கிடையில், தன் கணவர் விஜய், நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகவும் எவ்வளவோ கண்டித்தும் தனியாக நடிகையுடன் வெளியில் செல்வது புகைப்படம் போடுவதுமாக இருந்து வருகிறார் என்றும் புகாரளித்து விவாகரத்து மனுதாக்கல் செய்தார் சங்கீதா. இவ்வழக்கு இன்னும் விசாரணைக்கு வராத நிலையில், அது தேர்தல் நேரத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
நீதிபதி கொடுத்த விளக்க
இந்நிலையில், இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைத்தளங்களிலும் பேசுபொருளாக மாறியதையடுத்து ரகசியமாக வைக்க வேண்டிய இந்த விவாகரத்து மனு, இணையத்தில் கசிந்தது குறித்து தமிழக வெற்றிக்கழக வழக்கறிஞர் ஆதித்யா சோழன் தாக்கல் செய்த ஆர்.டி.ஐ மனுவிற்கு செங்கல்பட்டு மாவட்டம் முதன்மை நீதிபதி பதிலளித்துள்ளார்.

அதில், மனு கசிந்தது தொடர்பாக நீதிமன்றம் தானாக முன்வந்து எந்த புகாரும் அளிக்கப்பட்டவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் நீதிமன்ற முத்திரை இல்லாததால், அந்த மனு நீதிமன்றத்தில் இருந்து கசியவில்லை என்றும் மனுதாரர் தரப்பு புகார் அளிக்காததால், சங்கீதா தரப்பிலிருந்து இந்த மனு வெளியாகியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.