இளையராஜா அந்த 134 படங்களின் பாடல்களை பயன்படுத்த கூடாது.. தடை விதித்த நீதிமன்றம்

Ilayaraaja
By Kathick Feb 18, 2026 03:30 AM GMT
Report

இசைஞானி இளையராஜா தான் இசையமைத்த பாடல்களின் உரிமை தனக்கே சொந்தம் எனவும் மற்ற படங்களில் அதை பயன்படுத்தினால் அதற்காக தன்னிடம் இருந்து அனுமதி கண்டிப்பாக வாங்க வேண்டும் என இளையராஜா தொடர்ந்து தடை உத்தரவு வாங்கி வருகிறார்.

மஞ்சுமெல் பாய்ஸ், குட் பேட் அக்லி, Dude என பல படங்களில் தனது பாடல்களை பயன்படுத்தியதற்காக இளையராஜா வழக்கு தொடர்ந்து பாடல்களை நீக்க வைத்தார். இது மிகப்பெரிய அளவில் பேசுபொருளாக மாறியது.

இளையராஜா அந்த 134 படங்களின் பாடல்களை பயன்படுத்த கூடாது.. தடை விதித்த நீதிமன்றம் | Court Told Ilaiyaraaja Cant Use His 134 Own Songs

இந்த நிலையில், இளையராஜா இசையமைத்த 134 படங்களில் உள்ள பாடல்களின் உரிமை தங்களிடம் இருப்பதாகவும், அதை இளையராஜா தனது பாடல்கள் என கூறி இணையதளங்களில் பதிவேற்றம் செய்தது சட்டவிரோதம் என சரிகம நிறுவனம் டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

அதை விசாரித்த நீதிமன்றம், இளையராஜா அந்த 134 படங்களின் பாடல்களை பயன்படுத்த கூடாது, வேறு யாருக்கும் அதை பயன்படுத்த உரிமை வழங்க முடியாது என இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த விஷயம் தற்போது திரை வட்டாரத்தில் படுவைரலாகி வருகிறது.

இளையராஜா அந்த 134 படங்களின் பாடல்களை பயன்படுத்த கூடாது.. தடை விதித்த நீதிமன்றம் | Court Told Ilaiyaraaja Cant Use His 134 Own Songs