ரோட்டிலேயே விழுந்த ரசிகர்.. காரில் இருந்து இறங்கி STR செய்ததை பாருங்க!

Silambarasan Tamil Cinema Tamil Actors
By Bhavya Dec 10, 2025 04:30 AM GMT
Report

சிம்பு

நடிகர் சிம்பு கைவசம் தற்போது எஸ்.டி.ஆர் 49, அரசன் ஆகிய படங்கள் உள்ளன. இதில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் அரசன் திரைப்படத்தின் மீது அளவுகடந்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்துள்ளனர்.

சிம்புவுக்கு இருக்கும் ரசிகர் கூட்டம் குறித்து அனைவரும் அறிந்த ஒன்று தான். அவர் மீது உயிரே வைத்திருக்கும் ரசிகர்கள் பலர் உள்ளனர்.

ரோட்டிலேயே விழுந்த ரசிகர்.. காரில் இருந்து இறங்கி STR செய்ததை பாருங்க! | Crazy Things Simbu Fan Did Video Viral

இப்படி ஒரு ரசிகரா! 

இந்நிலையில், ரசிகர் ஒருவர் செய்த செயல் இணையத்தில் வீடியோ மூலம் வைரலாகி வருகிறது.

அதாவது, சிம்புவை பார்த்ததும் ஒரு ரசிகர் ரோட்டிலேயே விழுந்து வணங்கி இருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. அப்படி செய்வதை பார்த்த சிம்பு உடனே காரில் இருந்து இறங்கி வந்து அந்த நபரிடம் பேசி இருக்கிறார்.

மேலும் அவருடன் செல்பி எடுத்து கொண்டு, பேசி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்திருக்கிறார். சிம்புவை பார்த்ததும் அந்த நபர் கண்ணீரில் அழுவதும் வீடியோவில் இருக்கிறது. இதோ,