கால்பந்து வீரர் கிரிஸ்டினா ரொனால்டோ சொத்து மதிப்பு இத்தனை ஆயிரம் கோடிகளா...அடங்கப்பா
Cristiano Ronaldo
Sports
By Jai
கால்பந்து தான் உலக அளவில் அதிகம் சம்பளம் தரக்கூடிய விளையாட்டாக திகழ்ந்து வருகிறது. அதோடு உலகளவில் அதிகம் பேர் பார்க்க கூடிய விளையாட்டும் இது தான். இந்த விளையாட்டில் எதிர் வீரர்களுக்கு இன்றும் சிம்ம சொப்பனமாக இருப்பது கிரிஸ்டினா ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி தான்.

இவர்கள் இருவரும் தான் கால்பந்து உலகின் விஜய்-அஜித். இவர்களுடைய ரசிகர்கள் மோசமாக இணையத்தில் ஏன் கிரவுண்டிலேயே அடித்துக்கொள்வார்கள்.
இந்த நிலையில் உலக அளவில் அதிகம் சொத்து வைத்திருக்கும் விளையாட்டு வீரர் என்ற பெருமையை இந்தாண்டும் கிரிஸ்டினா ரொனால்டோ தட்டி செல்கிறார்.
இவரின் சொத்து மதிப்பு அமெரிக்கா டாலர் மதிப்பில் 260 மில்லியன் டாலர், இந்திய மதிப்பில் 2167 கோடிகளாம்.