அட்லியை வெச்சு தளபதியை பங்கமாக கலாய்த்த இயக்குனர்! கோபத்தில் ரசிகர்கள்..

Vijay Atlee Kumar
By Edward May 10, 2022 07:50 AM GMT
Report

பிரம்மாண்ட இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி அதன்பின் ராஜா ராணி படத்தினை இயக்கி மிகப்பெரிய ஹிட் கொடுத்தவர் இயக்குனர் அட்லீ. முதம் படமே சூப்பர் ஹிட் கொடுத்த அட்லீ அடுத்த கட்டமாக விஜய்யின் தெறி படத்தினை இயக்க வாய்ப்பு பெற்றார்.

படம் மிகப்பெரியளவில் வரவேற்பு பெற்று அட்லீயிடன் அடுத்த இரு படங்களான மெர்சல், பிகில் படத்தினை கொடுத்தார் விஜய். இம்மூன்று படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றும் வசூல் சாதனையும் பெற்று கொடுத்தது.

ஆனால் காப்பி இயக்குனர் என்ற பெயரை அட்லீக்கு எடுத்துக்கொண்டுத்தது. ரீமேக் இயக்குனர் என்ற பெயர் வாங்கியதால் அவர் பக்கம் தமிழ் நடிகர்கள் போவதை தவிர்த்து வருகிறார்கள்.

இதனால் பாலிவுட் பக்கம் சென்று பாலிவுட் கிங்காங் ஹாருக்கானை வைத்து ஒரு படத்தினை இயக்கி வருகிறார். இந்நிலையி அட்லீயை பங்கமாக தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமிதன் கலாய்த்துள்ளது விஜய் ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

எப்போது ஆக்டிவாக இருக்கும் அமுதன், உங்களை பொருத்தவரை பிராப்பர் தமிழ் ரீமேக் படம் என்ன என்று ரசிகர்கள் ஒருவர் கேட்டுள்ளார். அதற்கு அமிதன், மெர்சல் என்று யோசிக்காமல் ரீடிவிட் செய்துள்ளார். இந்த பதிலால் விஜய் ரசிகர்கள் அமுதனை கலாய்த்து வருகிறார்கள்.

GalleryGalleryGallery