சுடுகாடு பக்கத்தில் வீடு!! 40 பவுன் நகையை வித்து 3 மாடி வீடு கட்டிய நடிகை தீபா..

Cooku with Comali Tamil Actress Actress
By Edward Jul 02, 2025 07:30 AM GMT
Report

நடிகை தீபா

சின்னத்திரையில் மெட்டி ஒலி, மலர்கள், கோலங்கள், கார்த்திகை பெண்கள், வாணி ராணி, லட்சுமி ஸ்டோர், நாச்சியாபுரம், செந்தூர பூவே, அன்புடன் குஷி உள்ளிட்ட சீரியல்களில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் நடிகை தீபா. தன்னுடைய சிரிப்பு முகத்துடன் அனைவரது கவனத்தை ஈர்த்த தீபா, பல திரைப்படங்களில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்று வந்தார்.

குக் வித் கோமாளி 2, மிஸ்டர் அண்ட் மிஸ்டர் சின்னத்திரை 3, டாப் குக்கு டூப் குக்கு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிஸியான நடிகையாக உலா வருகிறார். சமீபத்தில் தன்னுடைய மூன்று மாடி வீடு உருவானதை பற்றி பகிர்ந்துள்ளார்.

சுடுகாடு பக்கத்தில் வீடு!! 40 பவுன் நகையை வித்து 3 மாடி வீடு கட்டிய நடிகை தீபா.. | Cwc Actress Deepa Open Talk About New Home

இந்த மூன்று மாடி வீட்டினை கட்ட என் வீட்டில் போட்ட 40 பவுன் நகையை விற்றுத்தான் கட்டுகிறோம். என் பேரப்பிள்ளைகள் பாதுகாப்பாக விளையாடும் படி கட்டி வருகிறேன் என்றும் தீபா தெரிவித்துள்ளார்.

மேலும், என் கல்யாணத்திற்கு முன்பே இந்த இடத்தை நிலமாக வாங்கிபோட்டது. அதன்பின் 40 பவுன் நகையை வித்து இந்த வீட்டை கட்டினோம். மேலும், எங்க வீட்டுக்கு பின்னாடி ஒரு சுடுகாடு இருக்கு, முதலில் நாங்கள் வரும் போது பயமுறுத்தினார்கள்.

ஆனால் அந்த சுடுகாடு பக்கத்தில் வந்தப்பின் தான், அந்த ஆசீர்வாதமோ என்னமோ தெரியல, வீடு மாடிவீடா ஆகிட்டு. அதனால் அதை சுடுகாடா பார்க்கமாட்டேன், கோவிலா கும்பிட்டுக்குவேன் என்று தீபா பகிர்ந்துள்ளார்.