ஜெயிலில் இருந்து வந்ததும் பால்டாயில் குடிசிட்டானா? வைரலாகும் CWC புகழ் வீடியோ..
பிரபல தொலைக்காட்சி சேனலில் மூன்று ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்நிகழ்ச்சியில்சமையலை மையமாக வைத்து காமெடி கலந்த போட்டிகளை வைத்து வயிறு குளுங்க சிரிக்கவும் வைத்து வருகிறது.
நிகழ்ச்சி போட்டியாளர்களுடன் சேர்ந்து கோமாளி செய்யும் அட்ராசிட்டி மிகப்பெரிய பங்கினை வகித்து வருகிறது. அப்படி பிரபலமாகி மக்களிடம் மிகப்பெரியளவில் பேராதரவை பெற்று வருகிறார்கள் புகழ், ஷிவாங்கி, மணிமேகலை, பாலா, சுனிதா உள்ளிட்ட பலர்.
அந்தவகையில் தற்போது மூன்று சீசன்களிலும் கோமாளியாக இருந்து தற்போது படவாய்ப்பினை பெற்று நடித்து வருகிறார் புகழ். எதற்கும் துணிந்தவன், வலிமை, சபாபதி, வீட்ல விசேஷம் படங்களை தொடர்ந்து தற்போது கதநாயகனாக Zoo Keeper என்ற படத்தில் நடித்து வருகிறர்.
இப்படத்திற்காக படப்பிடிப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து சில நாட்களுக்கு முன் விருதுநகர் மாவட்ட சிறையில் இருந்து புகழ் மற்றும் இயக்குனர் படக்குழுவினர் வெளியே வந்த வீடியோவை புகழ் வெளியிட்டார்.
இதனை அடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார் புகழ். இந்த வார எபிசோட்டின் வீடியோவில் புகழ் பால்டாயிலை குடித்து விட்டான் என்று செஃப் வெங்கடேஷ் பட் கூறி பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ வைரலாகியுள்ளது.