மீண்டும் இரு குழந்தைகளுக்கு தந்தையானார் டி இமான்!! மகிழ்ச்சியில் கண் இழந்த தம்பதியினர்..
டி இமான்
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமையாளராக இருந்து முன்னணி நடிகர்கள் உள்ளிட்ட பல நடிகர் நடிகைகளின் படங்களுக்கு இசையமைத்து பிரபலமானவர் டி இமான். கடந்த 2008ல் மோனிகா ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்து பிளெசிகா, வெரோனிகா என்ற இரு மகளை பெற்றெடுத்தார்.
அதன்பின் கடந்த 2021ல் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதனையடுத்து இவர்களின் பிரிவுக்கு சிவகார்த்திகேயன் தான் காரணம் என்ற பெயர் எழுந்து வந்தது. அதை உறுதி செய்யும் விதமாக டி இமான் ஒரு பேட்டியில், சிவகார்த்திகேயன் எனக்கு செய்த துரோகத்தை மறக்கமாட்டேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். 2022ல் இரண்டாம் திருமணம் செய்தப்பின் தான் சிவகார்த்திகேயன் மீது புகாரளித்தார்.
கடந்த ஆண்டு நெய்வேலியில் வீடின்றி கஷ்டப்பட்ட நரிகுறவர்களுக்கு வீடு கட்டிக்கொடுத்து உதவியுள்ளனர். இந்நிலையில், கண் பார்வையற்ற தம்பதியிடம் இருந்து பெண் குழந்தை ஒன்றை தத்தெடுத்துள்ளனர் டி இமான் தம்பதியினர்.
ஏற்கனவே ஒரு மகள் இருக்கும் நிலையில் இரண்டாம் குழந்தையை கவனிக்க முடியாமல் கஷ்டப்பட்டுள்ளனர் அந்த பார்வையற்ற தம்பதியினர். இதையறிந்த இமான் அந்த தம்பதியின் சம்மதத்தோடு அவர்களின் குழந்தையை தத்தெடுத்துள்ளனர்.
அதாவது, இரண்டாவது பெண் குழந்தை பிறந்தவுடன் இந்த குழந்தையின் வளர்ப்பின் பொறுப்புகளையும் பராமரிப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று இன்றுவரை குழந்தைக்கு தேவையான அனைத்தையும் இமான் ஏற்றுக்கொண்டிருக்கிறாராம். இதனால் டி இமான் மீண்டும் தந்தையாகியுள்ளதை பலரும் வாழ்த்து கூறி வருகிறார்கள்.