2-ஆம் திருமணம் செய்து கொண்ட டி இமானின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா
நடிகர் விஜய் நடிப்பில் 2002ல் வெளியான தமிழன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியவர் டி இமான். இப்படத்தினை தொடர்ந்து பல படங்களை இசையமைத்து தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார்.
ரஜினி, விஜய், அஜித், தனுஷ், விஷால், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்த டி இமான் சமீபத்தில் சிவகார்த்திகேயன் தனக்கு செய்த துரோகத்தை மன்னிக்க முடியாது என்றும் இந்த ஜென்மத்தில் அவருடன் இணைவது நடக்காது என்று கூறியிருந்தார்.
இதற்கு காரணம் முதல் மனைவி விவகாரத்தில் சிவகார்த்திகேயன் தலையீடு இமானுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது தான் என்று கூறப்படுகிறது. மினிமம் கியாரண்டி ஹீரோ, இயக்குனர்கள் என்ற வரிசையில் மினிமம் மியூசிக் டைரக்டர் என்ற இடத்தினை இமான் பிடித்திருக்கிறார்.
குறைவான சம்பளத்தில் இசையமைத்து வரும் இமான் ஒரு படத்திற்கு 2 கோடி மட்டுமே வாங்குகிறார். ஆண்டுக்கு 7, 9 கோடி வருமானமாக டி இமான் சம்பாதித்து, மொத்தம் 50 கோடி ரூபாய் சொத்து வைத்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆடி மற்றும் பிஎம்டபிள்யூ உள்ளிட்ட உயர் ரக கார்களை வைத்திருக்கிறார் இமான்.