யாருக்கு தெரியாம காசுக்காக ரோட்ல டான்ஸ் ஆடினேன்!! ரகசியத்தை உடைத்த சரத்குமார் மகள் வரலட்சுமி..

Varalaxmi Sarathkumar Modern Dance Zee Tamil Tamil Actress
By Edward Mar 07, 2025 08:30 AM GMT
Report

வரலட்சுமி

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாகவும் சரத்குமாரின் மகளாகவும் திகழ்ந்து வருகிறார் நடிகை வரலட்சுமி. போடா போடி படத்தில் நடிக்க ஆரம்பித்த வரலட்சுமி தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் சீசன் 2வில் நடுவராக பங்கேற்று வருகிறார்.

யாருக்கு தெரியாம காசுக்காக ரோட்ல டான்ஸ் ஆடினேன்!! ரகசியத்தை உடைத்த சரத்குமார் மகள் வரலட்சுமி.. | Dance In Road For Rs 2500 Varalaxmi Sarathukumar

அந்நிகழ்ச்சியில் 25 வயதான 3 குழந்தைகளுக்கு அம்மாவான பெண் போட்டியாளர் ஒருவர் கலந்து கொண்டு அசத்தி இருந்தார். அப்போது அவர் எனக்கு மியூசிக் கேட்டாலே டான்ஸ் தானாகவே வந்துவிடும்.

இதுவரைக்கும் நான் ரோட்டில் தான் டான்ஸ் ஆடி இருக்கிறேன் என்று உணர்ச்சிகரமாக பேசியிருக்கிறார். இதைக்கேட்ட வரலட்சுமி, ஒரு உண்மையை சொல்கிறேன், இதுவரைக்கும் யாரிடமும் இதை சொன்னது இல்லை.

யாருக்கு தெரியாம காசுக்காக ரோட்ல டான்ஸ் ஆடினேன்!! ரகசியத்தை உடைத்த சரத்குமார் மகள் வரலட்சுமி.. | Dance In Road For Rs 2500 Varalaxmi Sarathukumar

ரோட்டுல டான்ஸ் ஆடினேன்

இது ரியாலிட்டி ஷோ என்பதை தாண்டி திறமையை காட்டக்கூடிய மேடை என்பதால் சொல்கிறேன். நான் சினிமாவிற்கு வருவதற்கு முன், ரூ. 2500க்காக முதன்முதலில் ஒரு ஷோவில் ரோட்டில் டான்ஸ் ஆடினேன்.

ரோட்டில் ஆடுகிறோம் என்று தப்பா நினைக்காதீங்க, நான் ஆரம்பித்தது ரோட்டில்தான். ஆகையால் கண்டிப்பாக நீங்களும் பெரிய இடத்திற்கு வருவீங்க என்று அந்த பெண்ணுக்கு வரலட்சுமி நம்பிக்கை கொடுக்கும் வகையில் பேசியுள்ளார்.