டைட்டில் கிடைக்காமல் போனாலும் பஞ்சமிக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு!!வீடியோ..
ஜீ தமிழில் ஒளிப்பரபாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் Reloaded 3 நிகழ்ச்சியில் தொகுப்பாளராக மணிமேகலை மற்றும் மிர்ச்சி விஜய் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார்கள்.
கடந்த வாரம் நடந்த எபிசோட்டில் தில்லை - ப்ரீத்தா, நிதின் - தித்யா, சபரிஷ் - ஜனுஷிகா, பிரஜ்னா - ககனா, திலீப் - மெர்சீனா போன்ற 5 ஜோடிகள் இறுதி போட்டிக்கு தேர்வாகினர்.
இதனையடுத்து இறுதி போட்டி வரும் 20 ஆம் தேதி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகவுள்ள நிலையில், யார் டைட்டிலை கைப்பற்றினார் என்ற தகவல் வெளியாகவில்லை.
இந்நிலையில் டாப் 10ல் இடம்பெற்ற பஞ்சமி, இறுதி சுற்று போட்டியில் நடனமாடியிருக்கிறார். அப்போது பஞ்சமியின் ஏழ்மை நிலையை பார்த்த சினேகா, பஞ்சமி குழந்தைகளுக்கு சீர் கொடுத்திருக்கிறார்.
அதேபோல் வரலட்சுமி பஞ்சமி பேரில் நிலம் எழுதி கொடுத்திருக்கிறார். இதனைதொடர்ந்து ஜீ தமிழில் உருவாகவுள்ள ஒரு சீரியலில் பஞ்சமி நடிக்க வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள்.
பாபா பாஸ்கரும் பஞ்சமியை, நடிகை ஆகிட்ட, இந்த கண்ணாடி என்று கூறி பெருமைப்படுத்தி பேசியிருக்கிறார்.பஞ்சமி குறித்து அந்த பிரமோ வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.