கிட்னி பிரச்சனையால் போராடும் போட்டியாளர் நிதினின் அப்பா!! சினேகா செய்த செயல்
டான்ஸ் ஜோடி டான்ஸ்
ஜீ தமிழில் ஒளிப்பரபாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் Reloaded 3 நிகழ்ச்சியில் தொகுப்பாளராக மணிமேகலை மற்றும் மிர்ச்சி விஜய் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார்கள். கடந்த வாரம் நடந்த எபிசோட்டில் தில்லை - ப்ரீத்தா, நிதின் - தித்யா, சபரிஷ் - ஜனுஷிகா, பிரஜ்னா - ககனா, திலீப் - மெர்சீனா போன்ற 5 ஜோடிகள் இறுதி போட்டிக்கு தேர்வாகினர்.
இதனையடுத்து இறுதி போட்டி இன்று 20 ஆம் தேதி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகவுள்ள நிலையில், யார் டைட்டிலை கைப்பற்றினார் என்ற தகவல் வெளியாகவில்லை.
நிதினின் அப்பா
இந்நிலையில் இறுதி போட்டியாளரான நிதினிடம், நீ ஜெயித்து 10 லட்சம் வாங்கிவிட்டால் என்ன செய்வாய் என்று தொகுப்பாளர் விஜய், மணிமேகலை கேட்டுள்ளனர். அதற்கு நிதின், என் அப்பாவுக்கு கிட்னி ஆப்ரேஷம் பண்ணுவேன்.
அதுக்குத்தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன். காசு இல்லாததால், கிட்னி ஆப்ரேஷன் செய்வது மிஸ் ஆகிவிட்டது. நான் ஜெயித்து அதை செய்வேன் என்று நிதின் கூறியிருக்கிறார்.
இதனையடுத்து, நடிகை சினேகா மேடைக்கு வந்து, அப்பாவுக்கு ஆப்ரேஷன் செய்ய 2 மருத்துமனையில் பேசியிருக்கிறேன், கிட்னி கிடைத்தவுடனே, அப்பாவுக்கு ஆப்ரேஷன் செய்வோம், செலவை நாங்களே பார்த்துக்கொள்கிறோம் என்று சினேகா கூறியிருக்கிறார்.
இதனால் எமோஷனலான நிதின் கண்ணீர் மல்க சினேகாவை கட்டியணைத்து அழுதுள்ள வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.