பாதியில் நிறுத்தப்படுகிறதா ஜீ தமிழின் டான்ஸ் ஜோடி டான்ஸ் 3 Reloaded?.. நடந்தது என்ன?
டான்ஸ் ஜோடி டான்ஸ் 3
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ரசிகர்களின் பேராதரவுடன் கடந்த மார்ச் 1ம் தேதியில் இருந்து ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் 3.
24 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் மக்களின் மனதை பல போட்டியாளர்கள் கவர்ந்து வருகிறார்கள்.
நடந்தது என்ன?
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு ஒளிபரப்பப்பட்ட இந்த நிகழ்ச்சியில் சிவன், முருகன், விநாயகர் போன்று கடவுள் வேடங்களை அணிந்து நடனம் ஆடி இருந்தார்கள்.
அப்போது நடனமாடிய சில ஜோடி ஆபாசமாக நடனமாடி உள்ளனர். மேலும், கடவுள் வேடத்தில் இருந்தவர்களையும் நடனமாட விட்டு இருந்தார்கள்.
இதனால் இந்து மக்களின் நம்பிக்கைகளை புண்படுத்தி இருப்பதாக கூறி இந்து முன்னணி அமைப்பு ட்விட்டரில் புகார் தெரிவித்திருந்தார்கள்.
இதனால், ஜீ தமிழ் சேனலுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தற்போது, இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், இந்த பிரச்சனையால் நிகழ்ச்சியை நிறுத்திவிடுவார்களா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.