அப்படி இருந்த ஜோ-வா இது!! பாலிவுட் பிரமோஷனில் மாடர்ன் போட்டோஷூட்டில் நடிகை ஜோதிகா..
நடிகை ஜோதிகா
சூர்யாவின் பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற படத்தில் நடித்து நாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஜோதிகா. அதன்பின் இவர் முகவரி, குஷி, ரிதம், தெனாலி என முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் ரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானார்.
பிஸியாக நடித்துக் கொண்டு வந்தவருக்கு நடிகர் சூர்யாவுடன் காதல் ஏற்பட இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடிக்கு தியா மற்றும் தேவ் என ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். சூர்யா - ஜோதிகா சில ஆண்டுகளுக்கு முன் மும்பையில் புது வீடு எடுத்து செட்டிலாகிவிட்டார் என்ற தகவல் வெளியானது.
டப்பா கார்டல்
இந்நிலையில் பாலிவுட் படங்களில் நடித்து வரும் ஜோதிகா, டப்பா கார்டல் என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் நடிகை ஜோதிகா, மாடர்ன் லுக்கில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
ஜோ-வா இது என்று கூறும் அளவிற்கு ரசிகர்கள் அவரை பார்த்து ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.





