’பத்த வைக்கும்’ பாடலில் ரசிகர்களை ஈர்த்த ஜான்வி கபூர்!! வெளியான BTS வீடியோ...
Janhvi Kapoor
Dasara Movie
Actress
By Edward
இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் தேவரா. இப்படத்தில் ஹீரோயினாக ஜான்வி கபூர் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வருகிற செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகவுள்ளது.

தற்போது இந்த படத்தின் போஸ் புரொடக்க்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக ககூறப்படுகிறது. இப்படத்தில் இடம் பெற்றுள்ள 'பத்த வைக்கும்' என்ற பாடல் சமீபத்தில் வெளியாகியிருந்தது. பாடல் மணிகே மகே இதே என்ற இலங்கை ஆல்பம் போன்று இருக்கிறது என்று கலாய்த்து வந்தனர்.
ஆனால் ஒருசில அப்படத்தில் கிளாமராக ஆடிய நடிகை ஜான்வி கபூரின் அசைவை மட்டும் பார்த்து ரசித்து வந்தனர். தற்போது அப்பாடல் மேக்கில் எடுத்த வீடியோவை ஜான்வி கபூர் பகிர்ந்துள்ளார்.