நடிகை தீபிகா வாழ்க்கையில் முக்கியமான மூன்று விஷயங்கள்.. இது புதுசா இருக்கே!

Bollywood Deepika Padukone Actress
By Bhavya Nov 16, 2025 04:30 AM GMT
Report

தீபிகா படுகோன்

பாலிவுட் திரையுலகம் மூலம் பிரபலமாகி இன்று உலகளவில் புகழ் பெற்ற நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார் தீபிகா படுகோன்.

இவர் முதன் முதலில் அறிமுகமானது கன்னடத்தில் வெளிவந்த ஐஸ்வர்யா என்ற படத்தின் மூலம் தான்.

இதன்பின், ஓம் ஷாந்தி ஓம் படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமானார். தொடர்ந்து பாலிவுட்டில் கலக்கிய தீபிகா படுகோன் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார்.

தீபிகா படுகோன் நடிகர் ரன்வீர் சிங் உடன் 2018 - ல் திருமணம் நடைபெற்றது. இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

நடிகை தீபிகா வாழ்க்கையில் முக்கியமான மூன்று விஷயங்கள்.. இது புதுசா இருக்கே! | Deepika Life Important Things Details

முக்கியமான விஷயங்கள்! 

இந்நிலையில், தீபிகா பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதில், " திரைப்படத் துறையிலும் 8 மணி நேர வேலையை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். வாழ்க்கையில் அனைவரும் தூக்கம், உடற்பயிற்சி மற்றும் சத்தான உணவு ஆகிய மூன்று விஷயங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.