பத்திரிக்கையாளர் சந்திப்பில் டேவிட் வார்னர் செய்த விஷயம்! தடுத்து நிறுத்திய பணியாளர்:
cricket
david warner
By Jeeva
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனும் IPL ஆட்டத்தின் சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியின் முன்னாள் கேப்டனுமான டேவிட் வார்னர் தான் தற்போது இணையத்தில் வைரலாகும் ஹாட் டாபிக்.
நேற்றைய தினம் இலங்கை அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா அணி ஆடி வெற்றி அடைந்திருந்தது. இந்த ஆட்டத்தில் பலரது கேலிகளைத் தகர்த்து 42 பந்துகளில் 65 ரன்கள் விளாசிய வார்னர் ஆட்டம் முடிந்தபின் மைதானத்தை விட்டு செய்தியாளர்களை சந்திக்க வந்தார்.
அப்பொழுது அவர் முன்பு வைக்கப்பட்டிருந்த கொக்ககோலா பாட்டில்களை அகற்றிவைத்தார். அப்பொழுது அங்கிருந்த உதவி பணியாளர் பாட்டில்களை இருந்த இடத்திலேயே வைக்குமாறு கேட்டுக்கொண்டதன் பேரில் வார்னர் கொக்ககோலா பாட்டில்களை இருந்த இடத்திலேயே வைத்துவிட்டு "இது ரொனால்டோவுக்கு நல்லதென்றால் எனக்கும் நல்லது தான்" என நகைச்சுவையாக கூறினார்.
— Hassam (@Nasha_e_cricket) October 28, 2021