வாய்ப்பு கொடுத்த தனுஷ்! நடிகையாகி வீட்டிற்கே சென்ற தொகுப்பாளினி! அது எப்படி..
சின்னத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணியாற்றி சினிமாவில் அறிமுகமாகி பிரபலமாகி கொடுக்கட்டி பறப்பவர்கள் மத்தியில் இருப்பவர் திவ்யதர்ஷினி என்கிற டிடி. 20 ஆண்டுகளுக்கும் மேலாக சீரியல் நடிகையாகவும் நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும் பணியாற்றி வருகிறார்.
காப்பி வித் டிடி நிகழ்ச்சி மிகப்பெரிய ஹிட் கொடுத்தப்பின் திருமண வாழ்க்கையை ஆரம்பித்தார். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விவாகரத்து செய்து பிரிந்தார். அதன்பின் படவாய்ப்புகளுக்காக போட்டோஷூட் எடுத்து வந்தார். அதன் பலனாக நடிகர் தனுஷ் பா பாண்டி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகப்படுத்தினார்.
அதன்பின் ஜோஸ்வா திரைப்படத்தில் டிடி போலீஸ் கேரக்டரில் மிகவும் துணிச்சலாக நடித்துள்ளார். இந்நிலையில் தன்னை அறிமுகப்படுத்தியது யார் எப்படி என்ற காரணத்தைகூறியுள்ளார் டிடி. பா பாண்டியில் ஒரு கதாபாத்திரம் இருக்கிறது நடிக்க வேண்டும் என்று நடிகர் தனுஷ் என்னிடம் கேட்டார். அப்படிபட்டஒரு மனிதர் கேட்பதை வேண்டாம் என்றா கூறுவது.
அதனால் நானும் சந்தோஷமாக நடிக்க ஒப்புக்கொண்டேன். பெண்களுக்கு ஒரு கருத்தினை கூறும் கதாபாத்திரம் மக்களுக்கு தெரிந்த நபர் வேண்டும் என்று தனுஷ் கூறியிருந்தார். அதனால் தான் அதில் நடித்திருந்தேன்.
அதன்மூலம் நடிக்கும் ஆசை வர அதற்கான பயிற்சியில் ஈடுபட்டும் வந்தேன் என்று கூறியுள்ளார் டிடி. இதுமட்டுமா இல்லை வேறு எதாவது காரணம் இருக்கா என்று டிடி-யை பலர் கலாய்த்தும் வருகிறார்கள்.