இரவு பார்ட்டியால் ஏற்பட்ட விவாகரத்து! டிடியின் முன்னாள் கணவரின் இரண்டாம் மனைவி இவரா?
சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பல ஆண்டுகளாக பணியாற்றி வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பின் அதே நிகழ்ச்சிக்கு தொகுப்பாளினியாக அறிமுகமாகினார் டிடி.
இதையடுத்து பிரபலங்களை பேட்டிகாணும் நிகழ்ச்சியான காஃபி வித் டிடி நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்றார். பல சீசன்களை கடந்து மூத்த தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார் டிடி. இதற்கிடையில் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து சில ஆண்டுகளிலேயே விவாகரத்தும் பெற்றார்.
இதற்கு காரணம் இரவு பார்ட்டி ஆண் நண்பர்களுடன் சவகாசம் என கூறப்பட்டது. எங்கு சென்றாலும் கணவர் பற்றி கேட்கும் போது வாய்த்திறக்காமல் இருந்து வந்தார் டிடி. இந்நிலையில் டிடியின் முன்னாள் கணவர் ஸ்ரீகாந்த் இரண்டாம் திருமணம் செய்யவுள்ளார் என்று அவரை திருமணம் செய்யப்போகும் பெண்ணின் புகைப்படமும் இணையத்தில் கசிய துவங்கியுள்ளது. இப்புகைப்படம் சில ஆண்டுகளுக்கு முன் எடுத்த புகைப்படம் என்று கூறி வருகிறார்கள்.