தொகுப்பாளினி டிடி உடன் இருக்கும் 24 வயது இளைஞர்!! யார் தெரியுமா?
தொகுப்பாளினி டிடி
விஜய் டிவியில் சில ஆண்டுகளுக்கு முன் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்த நிகழ்ச்சிகளில் ஒன்று ஜோடி நம்பர் 1. இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பின் தொகுப்பாளினியாக பணியாற்றி மிகப்பெரிய இடத்தினை பிடித்தவர் தான் விஜே திவ்யதர்ஷினி.
டிடி என்று அனைவராலும் அழைக்கப்படும் திவ்யதர்ஷினி, காஃபி வித் டிடி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். இடையில் காலில் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் நிற்கமுடியாமல் கஷ்டப்பட்டு வந்தார் டிடி.
மருமகன்
தற்போது திரைப்படங்கள் நடித்தும் பட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வருகிறார். அடிக்கடி வெளிநாட்டுக்கு சுற்று வரும் டிடி, சமீபத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு சென்றுள்ளார். அங்கு எடுத்த சில புகைப்படங்களை டிடி பகிர்ந்துள்ளார். அப்புகைப்படங்களில் டிடி-யுடன் 24 வயது இளைஞர் இருந்துள்ளார்.
யார் என்று பலரும் கேள்வி கேட்ட நிலையில், டிடியின் அக்கா பிரியதர்ஷினியின் மகன் ரிஷி வம்சி தானாம். தன் மருமகன் மீது சாய்ந்து டிடி எடுத்துள்ள புகைப்படத்தை பார்த்து பலரும் ஹார்ட்டின் மற்றும் லைக்குகளை கொடுத்து வருகிறார்கள்.