இணையத்தை அதிரவைக்கும் போஸ்! அந்தமானில் வாய்ப்பிளக்க வைக்கும் டிடி-யின் புகைப்படம்..
தமிழ் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக இருந்து நடிகை, ஹோஸ்ட், வாய்ஸ் ஆர்ட்டிஸ், பேராசிரியர் என பண்முக தன்மை கொண்டு பயணித்து வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக இருந்து, பின் பல தொலைக்காட்சி சீரியல்களில் நடித்தும் வந்தார்.
பின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். ஜோடி நம்பர் 1, காஃபி வித் டிடி, என்கிட்ட மோதாதே போன்ற நிகழ்ச்சிகளை சிறப்பாக வழி நடத்தி தொகுத்து வந்தார். இதற்கிடையில் திருமணம் விவாகரத்து என சிக்கலில் சிக்கி தற்போது மீண்டும் நிகழ்ச்சிகளிலும் படங்களிலும் நடித்து வருகிறார்.
சமீபகாலமாக படவாய்ப்புகளுக்காக போட்டோஷூட் பக்கம் சென்று க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். அதேசமயம் தீவுகளுக்கு சென்று பிகினி உடையில் நீச்சல் குள புகைப்படத்தையும் வெளியிட்டு வந்தார். தற்போது இதுவரையில்லாத அளவிற்கு ரசிகர்கள் வாய்ப்பிளக்கும் படியான புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.