29 வயதில் குழந்தைக்காக கிரிக்கெட்டை உதறிய டி காக்! இதுதான் காரணம்..

southafrica test cricket dekock Quinton de Kock cricketplayer
By Edward Dec 31, 2021 07:40 AM GMT
Report

இந்திய அணி தற்போது தென்னாப்பிரிக்காவிற்கு சென்று சில போட்டிகளில் பங்கேற்க சென்றுள்ளது. அதன் முதல் டெஸ்ட் போட்டி ஆரம்பித்து இந்திய அணி வென்றது. ஏற்கனவே தென்னாப்பிரிக்க அணி வீரர் டி காக் 2 மற்றும் 3 டெஸ்ட் போட்டிக்காக விடுப்பு கேட்டிருந்தார்.

இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் தோற்றப்பின் தன்னுடைய டெஸ்ட் போட்டிக்கான ஓய்வை திடீரென அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியது. டெஸ்ட் போட்டியில் தோல்வி, வெற்றி, மகிழ்ச்சி, சங்கடம் என அனைத்தையும் பார்த்துவிட்டேன். தற்போது தன் வளரும் குடும்பத்திற்காக நேரத்தினை செலவிட காத்திருக்கிறேன்.

சில வாரத்தில் எனக்கு குழந்தை பிறக்கபோவதால் அதற்கான நேரத்தை செலவிட இதுதான் நல்ல நேரம். என் குடும்பம் தான் எனக்கு முக்கியம். என் நாட்டிற்கு விளையாடியது மிகவும் மகிழ்ச்சியாக நினைத்து வருகிறேன்.

எனக்காக ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார் டி காக். டி காக் ஐபில் போட்டியில் மும்பை அணியில் ஆடி வந்தது குறிப்பிடத்தக்கது.