விளையாட வரசொன்னா மண்டியிட்டு ரொமான்ஸ் கேக்குதா? இளம் பெண்ணிடம் சென்னை அணி வீரர் செய்த செயல்

csk ipl chennaisuperkings deepakchahar lovepropose
By Edward Oct 08, 2021 02:00 PM GMT
Report

ஐபிஎல் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதி 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி சிறப்பாக பெளலிங் செய்தும் பேட்டிங் செய்ததும் நல்ல வரவேற்பை பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பில் இருந்து வருகிறது.

இந்நிலையில் நேற்றி நடந்த போட்டி முடிந்த பின் சென்னை அணியின் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாஹர் ரசிகர்கள் பார்க்கும் இடத்திற்கு சென்று ஒரு பெண்ணை பார்த்து மண்டியிட்டு காதலை வெளிப்படுத்தும்படியாக மோதிரத்தை காட்டியுள்ளார்.

அப்பெண் அதிர்ச்சியடைந்து மோதிரத்தை ஏற்று அணிந்துகொண்டார். இந்நிகழ்ச்சி அவர்களுக்கு நிச்சயதார்த்த நிகழ்வை உறுதி படுத்தியதுடன் அப்பெண்ணுடன் புகைப்படங்களை எடுத்துக்கொண்டு சென்னை அணியினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் தீபக் சாஹர். சென்னை அணி தோல்வியடைந்தாலும் இந்த நிகழ்வு பெரியளவில் பேசப்பட்டு வருகிறது.

தீபக் சஹார் காதல் வெளிப்படுத்திய பெண் யார் என்ற விவரத்தை அறிய ரசிகர்கள் இணையத்தில் தேடி வருகின்றனர். இந்நிலையில் அவை தெரியவந்துள்ளது. நேற்று தீபக் சாஹர் ப்ரபோஸ் செய்த பெண்ணின் பெயர் ஜெயா பரத்வாஜ் ஆகும் அவர் பிரபல மாடலான சித்தார்த் பரத்வாஜின் சகோதரி என்றும் கூறப்படுகிறது. நீண்ட நாட்களாக நட்பாக பழகி வந்த இவர்கள் இருவரும் தற்போது காதலர்கள் ஆகியுள்ளனர்.

GalleryGalleryGalleryGallery