திரிஷா, நயன்தாராலாம் வேண்டாம்!! அந்த நடிகைக்கு ரூட்டை போட்டு பிக்கப் செய்த STR
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சிம்பு பல்வேறு சறுக்கல்களுக்கு பின் மாநாடு படத்தின் மூலம் தன்னுடைய கம்பேக் படத்தினை கொடுத்தார்.
100 கோடி வசூலை தந்த மாநாடு படத்திற்கு பின் வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற படங்களில் நடித்து வெற்றியை கொடுத்தார் சிம்பு.
இந்நிலையில் எஸ்டிஆரின் 48 வது படத்தில் புதிய அப்டெட் சமீபத்தில் வெளியானது. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தினை இயக்கிய தேசிங்கு பெரியசாமி சிம்புவை வைத்து இயக்கவுள்ளார். கமல் ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தினை பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கவுள்ளது.
அப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக யார் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாகவும் அதிக சம்பளம் பெரும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை தீபிகா படுகோனே தான் எஸ்டிஆர்48 படத்தில் நடிக்கவுள்ளாராம்.
இந்த தகவல் கேட்டதும் சிம்பு ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
Latest Buzz:
— Christopher Kanagaraj (@Chrissuccess) May 13, 2023
Deepika Padukone in #STR48
Desingh Periyasamy film.
