ஒரு படத்துக்கு சம்பளமே இத்தனை கோடியா!!வாய்ப்பிளக்க வைக்கும் நடிகை தீபிகா படுகோனேவின் சொத்து மதிப்பு..
பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருபவர் நடிகை தீபிகா படுகோனே. சமீபத்தில் நடிகர் ஷாருக்கான் நடித்த பதான் படத்தில் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்தார்.
இப்படத்தினை தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் தீபிகா படுகோன் சில வருடங்களுக்கு முன் ரன்பீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பும் நடிப்பில் தீவிரமாக கவனம் செலுத்தி வரும் தீபிகா படுகோனேவின் சம்பளம் மற்றும் சொத்து மதிப்பு விவரம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
தீபிகா படுகோனேவின் ஆண்டு வருமானம் 40 கோடி ரூபாய் என 497 கோடி சொத்து மதிப்பினை பெற்றுள்ளார். ஒரு படத்திற்காக 15 கோடி சம்பளமாக வாங்கியும் பிராண்ட் அம்பாஸ்டராக 7 முதல் 10 கோடி வரை சம்பளமாக பெறுகிறாராம்.
125 கோடி மதிப்பில் மும்பை உட்பட உயரக வீட்டினை வைத்துள்ளார். ஆடி ஏ8, பிஎம்டபிள்யூ, ரேன்ச் ரோவர், டிஸாட் உள்ளிட்ட விளையுயர்ந்த கார்களை வைத்துள்ளார்.
மேலும், இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் பக்கத்தில் விளம்பரத்திற்காக பகிரும் பதிவுகளுக்காக சுமார் 1.5 கோடி ரூபாய் பெறுகிறாராம். ஸ்டாட் அப் இன்வெஸ்ட்மெண்ட் செய்து பல கோடிகளில் காசு சம்பாதித்தும் வருகிறார் தீபிகா படுகோன்.