என்னது நான் கர்ப்பமா இருக்கேனா? வதந்திக்கு உடலை வளைத்து முற்றுப்புள்ளி வைத்த பிரபல நடிகை தீபிகா..

Deepika Padukone Ranveer Singh
By Jai May 14, 2022 07:55 AM GMT
Report

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் கோடியில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையகவும் திகழ்ந்து வருபவர் நடிகை தீபிகா படுகோனே. கன்னட படத்தில் ஐஸ்வர்யா என்ற படத்தில் அறிமுகமாகி இந்திய சினிமாவையே புரட்டி போட்டு வருகிறார் தீபிகா.

ஹாலிவுட் வரை சென்றும் பல நிறுவனங்களுக்கு அம்பாஸ்டராகவும் பணியாற்றி வருகிறார். கடந்த 2018ல் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்தார் தீபிகா. திருமணத்திற்கு பிறகு சிறந்த ஜோடியாக சினிமாவில் இருவரும் நடித்து வருகிறார்கள்.

இருவரும் கடைசியாக 83 படத்தில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றனர். சமீபத்தில் ரன்வீர் சிங் விமான நிலையத்திற்கு செல்லும் போது குழந்தையை தாலாட்டுவது போல் கையில் சையை காமித்து சென்றார்.

இதனை வைத்து தீபிகா படுகோன் கர்ப்பமாக இருக்கிறாரோ என்று ஊடகத்தில் வதந்திகள் பரவியது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் தீபிகா படுகோனே உடலை வளைத்தவாறு உடற்பயிற்சி, யோகா செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.