பிரபாஸ் உடன் நடிக்க அதிக சம்பளம் கேட்ட தீபிகா படுகோன்.. எவ்வளவு தெரியுமா
Deepika Padukone
Prabhas
By Karthick Raja
பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தீபிகா படுகோன். இவர் நடிப்பில் அடுத்ததாக ஸ்பிரிட் படம் உருவாகவுள்ளது. இப்படத்தில் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் தீபிகா நடிக்கிறார்.
மேலும் இப்படத்தில் ஹீரோவாக பிரபாஸ் நடிக்கிறார். இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க நடிகை தீபிகா படுகோன் ரூ. 20 கோடி சம்பளம் கேட்டுள்ளாராம். இதற்கு தயாரிப்பாளரும் சரி என கூறியுள்ளனர். இதன்மூலம் தனது திரை வாழ்க்கையில் இப்படத்திற்காக தான் தீபிகா படுகோன் அதிக சம்பளம் வாங்கவுள்ளார் என்கின்றனர்.
இதற்கு முன் கல்கி திரைப்படத்திலும் பிரபாஸ் உடன் இணைந்து தீபிகா படுகோன் நடித்திருந்தார். ஆனால், ஸ்பிரிட் படத்தில் இருவரும் ஜோடியாக நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.