சூப்பர் ஸ்டார் நடிகரின் வியர்வை துடைத்து கன்னத்தில் முத்தம்!! நடிகை தீபிகா படுகோனேவின் வீடியோ..
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாகவும் அதிக சம்பளம் பெரும் நடிகையாகவும் திகழ்ந்து வருபவர் நடிகை தீபிகா படுகோன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் காதல் ஜோடிகளாக பாலிவுட் சினிமாவில் ஜொலித்து வந்துள்ளனர். தீபிகா படுகோனேவின் நடத்தையால், இருவரும் பிரியவுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது. சில காலமாக கணவருடன் சேர்ந்து இல்லாமல் படங்களில் பிஸியாக இருந்து வருகிறார் என்றும் கூறப்பட்டது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தீபிகா தன் கணவருடன் பல நிகழ்ச்சிகளுக்கு ஜோடியாக சென்று வருகிறார்.
இந்நிலையில், தீபிகா படுகோன், பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் ஜோடியாக பதான் படத்தில் நடித்து பல கோடி வசூல் செய்திருந்தது.
அப்படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் இருந்த தீபிகா, ஷாருக்கான் வியர்வை துடைத்துவிட்டுள்ளார். மேலும் அவரின் கன்னத்தில் நச்சென்று ஒரு முத்தம் கொடுத்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.