ஸ்பிரிட் படக்குழுவுக்கு எக்கச்சக்க கண்டீஷன்!! தீபிகா விலகியது ஏன்? தயாரிப்பாளர் கூறிய காரணங்கள்

Deepika Padukone Prabhas Sandeep Reddy Vanga
By Jai Aug 21, 2026 05:45 AM GMT
Report

தீபிகா விலகியது ஏன்

அர்ஜுன் ரெட்டி, கபீர் சிங், அனிமல் ஆகிய பெரிய பட்ஜெட் படங்களை இயக்கி பிரபலமானவர் தான் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா. இப்படங்களை தொடர்ந்து தற்போது ஸ்பிரிட் என்ற படத்தை பிரபாஸ் கதாநாயகனாக வைத்து இயக்கி வருகிறார். டி-சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படம் காவல்துறை அதிகாரியை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது.

ஸ்பிரிட் படக்குழுவுக்கு எக்கச்சக்க கண்டீஷன்!! தீபிகா விலகியது ஏன்? தயாரிப்பாளர் கூறிய காரணங்கள் | Deepika Padukones Exit Spirit Sought 10 Profit

படத்தின் நாயகியாக முதலில் தீபிகா படுகோன் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. பிரபாஸ், தீபிகா இணைந்து கல்கி 2898 ஏடி படத்தில் இணைந்து நடித்திருந்த நிலையில் மீண்டும் இக்கூட்டணி தொடரும் என்ற எதிர்பார்ப்பு உருவானது.

ஆனால் இருவருக்கும் இடையேயான கூட்டணி ஸ்பிரிட் படத்தில் அமையவில்லை. அதற்கு காரணம் தீபிகா படுகோன் ஸ்பிரிட் படத்தில் இருந்து விலகியதுதான். அவர் விலகியதற்கு பல காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா விளக்கத்தை கொடுத்துள்ளார்.

ஸ்பிரிட் படக்குழுவுக்கு எக்கச்சக்க கண்டீஷன்!! தீபிகா விலகியது ஏன்? தயாரிப்பாளர் கூறிய காரணங்கள் | Deepika Padukones Exit Spirit Sought 10 Profit

கண்டீஷன்

அதில், தீபிகாவின் சம்பள எதிர்பார்ப்பு பேச்சுவார்த்தையில் முக்கிய விஷயம் இருந்தது. அதேபோல், ஷூட்டிங்கில் அவர் செலவிடும் நேரம் குறித்தும் சில நிபந்தனைகள் இருந்தது. படத்தின் வெளியீட்டுக்குப்பின் கிடைக்கும் லாபத்தில் 10 சதவீதத்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்தார்.

ஸ்பிரிட் படக்குழுவுக்கு எக்கச்சக்க கண்டீஷன்!! தீபிகா விலகியது ஏன்? தயாரிப்பாளர் கூறிய காரணங்கள் | Deepika Padukones Exit Spirit Sought 10 Profit

தெலுங்கு வசனங்களை பேசுவது தொடர்பான விவகாரமும் அவர் படத்திலிருந்து விலகியதற்கான காரணம் என்று கூறியிருக்கிறார். அவர் விலகியப்பின் நாயகியாக திரிப்தி டிம்ரி தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.